டெல்லி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி நான்கு விக்கெட்களை இழந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்க உள்ளன. இந்நிலையில் முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கே கே ஆர் முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் ஆஸி அணியின் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப் பட்டார்.
ஆனால் பெரிய அளவில் அவரால் ஸ்கோர் செய்ய முடியவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்த்தால் ரன்ரேட்டை அவர்களால் உயர்த்த முடியவில்லை. தற்போது 14 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 89 ரன்கள் சேர்த்து நிதானமான ஆட்டத்தை விளையாடி வருகிறது.