Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தள்ளிப் போகும் தளபதி 67 ஷூட்டிங்… அப்போ ரிலீஸ்? வெளியான தகவல்!

தள்ளிப் போகும் தளபதி 67 ஷூட்டிங்… அப்போ ரிலீஸ்? வெளியான தகவல்!
, வெள்ளி, 8 ஜூலை 2022 (16:15 IST)
விஜய்யின் வாரிசு படத்துக்குப் பிறகு அவரை இயக்கப் போவது லோகேஷ்தான் என்பது உறுதியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கப்போகும் இயக்குனர்கள் பற்றிய தகவலும் வெளியாகி வருகிறது. விஜய் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் திரைக்கதை உருவாக்கத்தில் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் பங்களிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்துக்கான திரைக்கதை வேலைகளை இயக்குனர் லோகேஷ் தன் குழுவோடு தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட படப்பிடிப்பு டிசம்பருக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகை குறைவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”விஜய்க்கு கதை சொல்லி இருக்கிறேன்… எதிர்காலத்தில்” இயக்குனர் ஹரி பகிர்ந்த தகவல்!