Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 67 படத்தில் இணையும் மற்றொரு இயக்குனர்…ரசிகர்களை குஷியாக்கிய தகவல்

தளபதி 67  படத்தில் இணையும் மற்றொரு இயக்குனர்…ரசிகர்களை குஷியாக்கிய தகவல்
, சனி, 2 ஜூலை 2022 (15:00 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய்யை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கப்போகும் இயக்குனர்கள் பற்றிய தகவலும் வெளியாகி வருகிறது. விஜய் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் திரைக்கதை உருவாக்கத்தில் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் பங்களிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே லோகேஷின் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் இவர் பங்காற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு 44 வயது ஆகிவிட்டது… வாய்ப்பு கிடைக்குமா? பிரபல நடிகையின் கருத்து!