இசைஞானி இளையராஜாவுக்கு, தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் லண்டனில் இசைஞானி இளையராஜா வெற்றிகரமாக நடத்திய சிம்போனி இசை நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்படப் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, இந்த பாராட்டு விழா வரும் செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது.
இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, இளையராஜாவின் இசை பயணத்தையும், அவர் இந்திய இசைக்கு அளித்த பங்களிப்பையும் கௌரவிக்கும் விதமாக அமையும்.