Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருந்து ‘குட் பேட் அக்லி’ நீக்கப்படுகிறதா? என்ன காரணம்?

Advertiesment
அஜித்

Mahendran

, செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (17:56 IST)
அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான இந்தப் படத்தில், இசைஞானி இளையராஜா இசையமைத்த சில பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இளையராஜாவிடம் அனுமதி பெறாமல் அவரது பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறி, இளையராஜா தரப்பில் சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் பயன்படுத்திய பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், மேலும் 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.
 
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தயாரிப்பாளர் தரப்பு, பாடல்களை பயன்படுத்த, பாடல்களின் சட்டபூர்வ உரிமையாளர்களிடம் இருந்து முறையாக அனுமதி பெறப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 
 
இந்த நிலையில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு காரணமாக, 'குட் பேட் அக்லி' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது திரையுலக வட்டாரத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருப்பு நிற உடையில் பிரியா வாரியரின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!