Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாசிக்: கமல் பிறந்தநாளில் நாயகன் ரீ ரிலீஸ்!

Advertiesment
Nayagan Movie

Prasanth K

, புதன், 1 அக்டோபர் 2025 (15:03 IST)

தமிழ் சினிமாவின் க்ளாசிக் படமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகன் படம் ரீரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழ் சினிமாவில் நடிப்பில் பல அசாத்தியங்களை செய்தவர் கமல்ஹாசன். கடந்த 1987ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம். இந்த படம் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 400வது படமும் கூட.. இந்த படத்தில் சரண்யா, ஜனகராஜ், கார்த்திகா, நாசர் என பலர் நடித்திருந்தனர்.

 

ஹாலிவுட்டின் காட்ஃபாதர் படம் போல எடுக்கப்பட்ட இந்த படம் அந்த காலத்தில் பெரிய வசூல் செய்திராத படமாக இருந்தாலும், அதன் பின்னர் ரசிகர்களால் இன்றளவும் தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாசிக் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முக்கியமாக அதில் வரும் ‘நீங்க நல்லவரா கெட்டவரா’ வசனம் இன்றளவும் பிரபலமாக இருக்கிறது. நவம்பர் 6ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி நாயகனை ரீ ரிலீஸ் செய்யப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

நாயகன் படத்தை இதுவரை தியேட்டரில் பார்த்திராத ரசிகர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காத்து வாங்கும் ‘இட்லி கடை’? விஜய் வீடியோதான் காரணமா?