சிவகார்த்தியேன் போல சின்னத்திரையில் இருந்து வந்து சினிமாவில் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறார் கவின். லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் ஆகிய படங்களின் மூலம் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். இதையடுத்து அவர் நடித்த பிளடி பெக்கர் என்ற படம் ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் கவினின் அடுத்த ரிலீஸாக கிஸ் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்கிய கிஸ் படத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இந்த படம் எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் ரிலீஸான நிலையில் முதல் நாளில் இருந்தே வசூலில் சுணக்கமே நிலவுகிறது.
இந்த படம் ரிலீஸாகி முதல் வார விடுமுறை நாட்கள் முடிந்த நிலையில் ஐந்து நாட்களில் தமிழ்நாட்டளவில் 2 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கவின் போன்ற வளர்ந்துவரும்-அதிக சம்பளம் வாங்கும்- நடிகர் ஒருவரின் படத்துக்கு இத்தகைய வசூல் மிகவும் கம்மியாகப் பார்க்கப்படுகிறது.