கடந்த சில ஆண்டுகளாக சினிமா ஒரு வெற்றிகரமான தொழிலாக இல்லை என்ற வாதம் வைக்கப்படுகிறது. ஏனெனில் வெளியாகும் படங்களில் 5 சதவீதம் மற்றுமே வெற்றிப் பெறுவதாக சொல்லப்படுகிறது. இதற்கு சினிமா பற்றிய அறிவு இல்லாமல் உருவாக்கி வெளியிடப்படும் படங்கள்தான் காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் 2024 ஆம் ஆண்டில் 241 தமிழ் படங்கள் ரிலீஸாகியுள்ளது. அதில் பதினெட்டு படங்கள் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளதாக தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் வெற்றி சதவீதம் 1 சதவீதத்துக்குள் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் உருவான படங்களின் பட்ஜெட் மதிப்பு சுமார் 3000 கோடி ரூபாயாக இருக்க இழப்பு 1000 கோடி ரூபாய் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.