அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் அவர் தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்தார் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது அவர் குட் பேட் அக்லி படத்திற்கு தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவில் உறுதி செய்துள்ளார்.
அஜித் அவர்களின் குரலை கேட்பதற்காக திரையரங்கில் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் காத்திருப்பேன். ஆனால் தற்போது அவருடைய குரலை டப்பிங் போது நேரடியாக கேட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு எனக்கு மிகவும் இனிமையான ஆண்டு. குட் பேட் அக்லி படத்தின் பயணத்தை என் மனதில் நிலையாக நிறுத்தி வைத்திருப்பேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.