தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

Mahendran
புதன், 25 ஜூன் 2025 (17:50 IST)
போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியதாக கூறப்பட்டு தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, அவரிடம் விசாரணை செய்ய சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், கேரளாவில் படப்பிடிப்பில் இருந்த கிருஷ்ணா திடீரென தலைமறைவானார்.
 
இதனை அடுத்து, தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி வந்த நிலையில், சென்னையில் அவர் பிடிபட்டதாகவும், அவரை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
மேலும், ரத்தப் பரிசோதனையில் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானால், அவரும் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments