Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யா விஜய்சேதுபதியின் ஃபீனிக்ஸ் திரைப்பட ரிலீஸ் கடைசி நேரத்தில் தள்ளிவைப்பு!

Advertiesment
சூர்யா விஜய்சேதுபதியின் ஃபீனிக்ஸ் திரைப்பட ரிலீஸ் கடைசி நேரத்தில் தள்ளிவைப்பு!

vinoth

, வியாழன், 14 நவம்பர் 2024 (08:07 IST)
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி சிந்துபாத் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ஓடாததால் அதன் பிறகு நடிப்புக்கு ஒரு இடைவெளி விட்டார்.

இதற்கிடையில் சூர்யா, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஃபீனிக்ஸ் படம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு ஷூட்டிங் உள்ளிட்ட பணிகள் எல்லாம் முடிந்து இன்று ரிலீஸ் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஃபீனிக்ஸ் வீழான் திரைப்படம் நவம்பர் 14ம் தேதியன்று வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இது, எதிர்பாராத காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. சிறந்த சினிமா அனுபவத்தைத் தர மறுவெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிப்போம்.உங்கள் ஆதரவுக்கும் புரிதலுக்கும் நன்றி. ஃபீனிக்ஸ் முன்பை விர வலுவாக உயரும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!