திரைப்பட வேலைப்பளுவில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆன்மீகப் புத்துணர்ச்சிக்காக இமயமலைக்கு சென்றுள்ளார். அவர் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்திற்கு சென்று சுவாமி தயானந்தாவுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
அங்கு தங்கியிருந்தபோது, ரஜினிகாந்த் கங்கை நதிக்கரையில் தியானம் செய்ததாகவும், கங்கா ஆரத்தியில் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. ரிஷிகேஷை தொடர்ந்து, அவர் துவாரஹட்டிற்கும் சென்றுள்ளார்.
அவரது ஆன்மீகப் பயணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு புகைப்படத்தில், அவர் வெள்ளை உடை அணிந்து, சாலையோரத்தில் உள்ள கையேந்திபவனில் உணவருந்தும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.