Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

30 வயது ரஜினிகாந்தை மனதில் வைத்து ‘ட்யூட்’ கதையை எழுதினேன்… இயக்குனர் கீர்த்தீஸ்வரன் பகிர்வு!

Advertiesment
லவ் டுடே

vinoth

, திங்கள், 6 அக்டோபர் 2025 (08:53 IST)
லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ப்ரதீப் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK என்ற படத்திலும் அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ‘ட்யூட்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த படங்களில் LIK செப்டம்பர் மாதத்திலும் ட்யூட் தீபாவளிக்கும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

ட்யூட் படம் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி ரிலீஸ் வேலைகளை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் ப்ரதீப்புடன் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சாய் அப்யங்கர் இசையமைக்க, அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் கீர்த்தீஸ்வரன் “நான் இந்த கதையை எழுதும் போது 30 வயது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மனதில் வைத்துதான் எழுதினேன். அதற்கு ப்ரதீப் பொருத்தமாக இருந்தார். இது காதல் கதை மட்டும் இல்லை. இதில் ஆக்‌ஷன் மற்றும் மாஸ் விஷயங்களும் உள்ளன. மமிதா பைஜு உள்ளே வந்ததும் ரஜினி –ஸ்ரீதேவி ஜோடியை ஞாபகப்படுத்தும் விதமாக அமைந்தது. ” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றே நாளில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்த தனுஷ் படக்குழு!