குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்ற இயக்குனர் லோகேஷ் அதே வேகத்தில் இப்போது சறுக்கியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய கூலி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக தாக்குதல்களை சந்தித்துள்ளது. குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்ரோல்களுக்கு உள்ளாகும் அளவுக்கு சென்றது விமர்சனம்.
இதன் காரணமாக ரஜினி- கமல் இணையும் படத்தில் இருந்து அவர் விலக்கப்பட்டுள்ளதாக சொலப்படுகிறது. அதனால் அவர் கைதி 2 படத்தைதான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது கைதி 2 பற்றியும் நம்பிக்கை அளிக்கும் விதமாக செய்திகள் வெளியாகவில்லை.
தெலுங்கு ஊடகங்களில் கடந்த சில நாட்களாக “கருத்து வேறுபாடு காரணமாக கைதி 2 திரைப்படம் கைவிடப்பட்டு விட்டதாகவும், இதோடு LCU முடிவுக்கு வருவதாகவும்” செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன. கைதி 2 படத்தை இயக்க 75 கோடி ரூபாய் சம்பளமாக லோகேஷ் கேட்டதாகவும் ஆனால் அதற்குத் தயாரிப்பு நிறுவனம் சம்மதிக்கவில்லை என்றும் ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த தகவல்களின் உண்மைத் தன்மை குறித்த தெளிவின்மையே நிலவுகிறது.