ரஜினி படத்தை வேண்டாம் என்ற சுந்தர் சி… அடுத்த படம் யாருடன்?

vinoth
செவ்வாய், 18 நவம்பர் 2025 (10:17 IST)
கடந்த வாரத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசனின் ராஜகமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரஜினிகாந்த் சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

ஏற்கனவே சுந்தர் சி , ரஜினியை வைத்து அருணாசலம் என்ற ஹிட் படத்தைக் கொடுத்துள்ளார். இதனால் ஒரு ஜாலியான படமாக இந்த படம் அமையும் என ரஜினி ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி இப்போது அறிவித்து பீதியைக் கிளப்பினார்.

இது குறித்து பல்வேறு விதமான சர்ச்சைகள் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் சுந்தர் சியின் அடுத்த படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சுந்தர் சி அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டே சுந்தர் சி, கார்த்திக் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் இணையும் ‘ரௌடி பேபி’ கூட்டணி… தனுஷின் அடுத்த படத்தில் சாய்பல்லவி?

ரஜினியின் அடுத்தப் பட இயக்குனர் ‘மகாராஜா’ புகழ் நித்திலனா?

17 நாட்கள் இடைவிடாத படப்பிடிப்பு… ‘மகுடம்’ க்ளைமேக்ஸை முடித்த விஷால்!

முதல்முறையாக இணைந்து பாடிய இளையராஜா & யுவன் ஷங்கர் ராஜா!

நடிப்பு சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மரணம்!.. சூப்பர்ஸ்டார் நேரில் அஞ்சலி!..

அடுத்த கட்டுரையில்
Show comments