இயக்குநர் சுந்தர் சியின் அடுத்த படத்தில் விஷால் நடிக்க இருப்பதாகவும், சுந்தர் சி ஒரு பரபரப்பான இயக்குநர் என்பதால், கிடைத்த காலத்தை வீணடிக்காமல் உடனடியாக இந்த பட வேலைகளை தொடங்கிவிட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	விஷால், சுந்தர் சி கூட்டணியில் உருவான 'மதகஜ ராஜா' திரைப்படம் பல வருட தாமதங்களுக்கு பிறகு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து, இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது.
 
									
										
			        							
								
																	
	 
	இந்த புதிய படத்துக்கு இசையமைப்பாளராக நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில், தான் நடிப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைக்கப் போவதாக விஜய் ஆண்டனி அறிவித்திருந்தார். அதை அவர் இந்தப்படத்தின் மூலம் செயல்படுத்துகிறார். 'மதகஜ ராஜா' படத்திற்கும் இவர் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	நவம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.