Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒன்றரை வருடங்களாக அற்புதமான பயணம்… மதராஸி படம் குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

Advertiesment
சிவகார்த்திகேயன்

vinoth

, வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (09:03 IST)
அமரன் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் இன்று ரிலீஸாகவுள்ளது. இதற்காகப் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார்.

ஆனாலும் மதராஸி படத்துக்குத் தொடக்கம் முதலே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இல்லை. இதற்கு முக்கியக் காரணம் முருகதாஸின் சமீபத்தையப் படங்கள் அடைந்த படுதோல்வி. அதே  போல படத்தின் போஸ்டர்களில் இருந்து பாடல்கள் வரை (சலம்பல பாடல் தவிர) எதுவுமே ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இல்லை. இதன் காரணமாக தற்போது முன்பதிவு தொடங்கிவிட்டாலும், பெரிய அளவில் புக்கிங் இல்லை என்று சொல்லப்படுகிறது. படம் ரிலீஸாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கும்போது இந்த நிலை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படம் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் சிவகார்த்திகேயன். அதில் “இயக்குனர் முருகதாஸ் சார், மிகச்சிறந்த நடிகர்கள் மற்றும் அன்பான அனிருத் என கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அற்புதமான பயணம் ஒன்றை மேற்கொண்டேன். அதிரடி கலந்த பொழுதுபோக்குப் படமாக நாங்கள் உருவாக்கியுள்ள ‘மதராஸி’ படத்தை நீங்கள் அனைவரும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசான் நிறுவனத்தால் ஏற்பட்ட திருப்புமுனை.. புதிய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்..!