தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு காத்திருக்கும் படங்களில் ஒன்று சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் வாடிவாசல் திரைப்படம். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஆகியோரின் அடுத்தடுத்த பட வேலைகளால் இந்த படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.
இந்நிலையில் வாடிவாசல் திரைப்படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. சூர்யா, வெங்கி அட்லூரி படத்திலும், வெற்றிமாறன் சிம்பு நடிக்கும் படத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் தயாரிப்பாளர் தாணு வாடிவாசல் படத்தை எப்படியாவது தொடங்கிவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்த நிலையில் அடுத்த ஆண்டில் வாடிவாசல் படத்தைத் தொடங்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.