தமிழ் சினிமாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத். இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டும்தான் அவர் இசையமைத்து வருகிறார். தமிழ் தாண்டியும் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
தற்போது தமிழில் ரஜினிகாந்தின் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன. படங்களுக்கு இசையமைப்பது போலவே தொடர்ந்து பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். 34 வயதாகும் அனிருத் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சிலராக வலம் வருகிறார். அவர் இசையில் நாளை சிவகார்த்திகேயன் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி படம் ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் பற்றி பேசியுள்ள அனிருத் “ரெண்டு படம் மட்டுமே இசையமைத்திருந்த (3 மற்றும் வணக்கம் சென்னை) எனக்குக் கத்தி என்ற பெரிய படத்தின் வாய்ப்பைக் கொடுத்தார். மான் கராத்தே மற்றும் கத்தி என என டபுள் ட்ரீட்டாகக் கொடுத்தார். நான் இந்த இடத்தில் இருக்கக் காரணமே அவர்தான்” எனக் கூறியுள்ளார்.