நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி, புதிய எல்லைகளை நோக்கி பயணித்துள்ளார். அவர் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து அமெரிக்கா சென்றுள்ளார்.
அவர்களின் இந்த பயணத்தின் முக்கிய நோக்கம், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் பிரம்மாண்டமான சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படத்திற்கான சிறப்பு பணிகள் ஆகும்.
இந்தப் படத்தில் பயன்படுத்தப்படவுள்ள அதிநவீன கிராபிக்ஸ் மற்றும் VFX காட்சிகளுக்காக, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள புகழ்பெற்ற லோலா ஸ்டுடியோவில் உடல் ஸ்கேனிங் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடிகர் அல்லு அர்ஜூன் இயக்கத்தில் அட்லி இயக்கும் படத்திற்காக இதேபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய நிலையில், சிவகார்த்திகேயனும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறார்.
இந்த வேலைகள் காரணமாக, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அவர் ஒப்பந்தமான ஃபேஷன் ஸ்டுடியோஸ் படத்தின் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சிவகார்த்திகேயன் டிசம்பர் 14ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.