தமிழ் சினிமாவில் தன்னுடைய 17 ஆவது வயதில் வெயில் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி வி பிரகாஷ். முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்த அவர் அடுத்தடுத்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார். இதையடுத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.
இடையில் நடிப்புக்காக இசையமைப்பதைக் குறைத்துக் கொண்டாலும், தற்போது நடிப்பை விட இசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் தன் திரைவாழ்க்கையில் முக்கியமான மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். தனது நூறாவது படமாக பராசக்தி படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். இது சம்மந்தமான ரெக்கார்டிங் புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. முன்பு யுவனின் நூறாவது படமான பிரியாணியில் யுவன் இசையில் ஜி வி பிரகாஷ் ஒரு பாடலைப் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.