பாடகி சின்மயி, இயக்குநர் மோகன். ஜியின் வரவிருக்கும் திரைப்படமான 'திரௌபதி - 2' படத்திற்காக பாடியதற்காக தனது மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் முதல் பாடலான 'எம்கோனே'-ஐ சின்மயி பாடியிருந்தார். சமூக வலைத்தளங்களில், பெண் சுதந்திரம் குறித்து பேசும் சின்மயி, சாதி ரீதியிலானதாக கருதப்படும் மோகன். ஜி படத்திற்குப் பாடியது ஏன் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இதற்குப் பதிலளித்த சின்மயி, "இசையமைப்பாளர் ஜிப்ரானை எனக்கு 18 ஆண்டுகளாக தெரியும். அவர் அழைத்ததால், எப்போதும் போல சென்று பாடினேன். பாடலை சுற்றியுள்ள விஷயங்களை நான் இப்போதுதான் அறிந்துகொள்கிறேன்.
முன்பே அறிந்திருந்தால், என் கொள்கைகளுக்கு முரண்பட்டவை என்பதால் நான் இதில் இணைந்திருக்க மாட்டேன். இதுதான் முழு உண்மை" என்று கூறி, தான் அறியாமல் பாடியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்