இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான பேட் கேர்ள்திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படம் ரிலீஸுக்கு முன்பாகவே பல உலகப் பட விழாக்களில் கலந்துகொண்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் அஞ்சலி சிவராமன் மையக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஒரு பெண் தன்னுடைய பள்ளி காலத்தில் இருந்து மத்திம வயதை அடையும் வரை அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பெண்ணியப் பார்வையில் சொல்லும் படமாக பேட் கேர்ள் உருவாகியிருந்தது, படம் ரிலீஸாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரியளவில் ஜொலிக்கவில்லை.
இதனால் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸூம் தாமதம் ஆனது. இந்நிலையில் தற்போது ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.