Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயாரிப்பாளராகக் களமிறங்கும் சிம்ரன்… முதல் படம் குறித்து வெளியான அப்டேட்!

Advertiesment
Actress Simran

vinoth

, வியாழன், 11 செப்டம்பர் 2025 (14:59 IST)
தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சிம்ரன். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித், கமல் என பலருடனும் படம் நடித்த இவர், பேட்ட படத்தில் ரஜினிகாந்திற்கும் ஜோடியாக நடித்தார். தற்போது வயதாகியிருக்கும் சிம்ரன் பல்வேறு துணைக் கதாப்பாத்திரங்களில் மகான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சமீபத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து அவர் மீண்டும் குணச்சித்திர நடிகையாக செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிம்ரனோ தயாரிப்பாளராக தனது புதிய அவதாரத்தை எடுத்துள்ளார்.

தயாரிப்பு நிறுவனத்து Four Dee motion Pictures எனப் பெயர் வைத்துள்ள சிம்ரன் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை முதல் படமாகத் தயாரித்து அதில் மையக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஷ்யாம் என்பவர் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட்டில் நடிகராகக் களமிறங்குகிறாரா தோனி…மாதவனுடன் இணைந்து ஆக்‌ஷன் டீசர்!