வெற்றிமாறன் & சிம்பு இணையும் ‘அரசன்’ படத்தின் கதாநாயகி சமந்தாவா?

vinoth
செவ்வாய், 7 அக்டோபர் 2025 (09:12 IST)
வெற்றிமாறன் –சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த ‘வாடிவாசல்’ திரைப்படம் தற்காலிகமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஒரு படம் உடனடியாக உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்துக்கும் ‘வடசென்னை ‘ படத்துக்கும் தொடர்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று காலை இந்த படத்தின் முதல் லுக் போஸ்டருடன் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்துக்கு ‘அரசன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  படத்தில் தயாரிப்பாளர் தாணு, நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குனர் வெற்றி மாறன் ஆகியோர் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் எதுவும் இல்லை.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல கதாநாயகியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக இதே வேடத்துக்கு சாய் பல்லவியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி பேசிய பிரபல நடிகர்.. நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா?

அழகுப் பதுமை எஸ்தர் அனிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான உடையில் ஹாட் லுக்கில் அசத்தும் தமன்னா…!

இதுவரை பார்த்திராத ஒன்றை உருவாக்குகிறோம்… தனது படம் குறித்து அட்லி அப்டேட்!

நூறாவது படத்தில் மீண்டும் இணைகிறதா நாகார்ஜுனா- தபு ஜோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments