Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்பு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க..! - கலைப்புலி தாணு வெளியிட்ட அசத்தல் அப்டேட்!

Advertiesment
STR Vetrimaran

Prasanth K

, வெள்ளி, 3 அக்டோபர் 2025 (15:34 IST)

சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பதில் அளிக்கும் விதமாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பதிவிட்டுள்ளார்.

 

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு முதன்முறையாக நடித்து வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வடச்சென்னை 2 எப்போது வரும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு, அதே வடசென்னை கதைக்களத்தில் சிம்புவின் புதிய படம் உருவாவது உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வரும்? ட்ரெய்லர் எப்போது வரும்? என சமூக வலைதளங்களை ரசிகர்கள் கேள்விகளால் நிரப்பி வருகின்றனர்.

 

இதற்கு பதில் அளிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் கலைப்புலி தாணு “சிம்புவின் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க STR & வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும். ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது.

இதுவே STR-வெற்றிமாறன் கூட்டணி மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் அன்பிற்கும் எங்களின் நன்றியை தெரிவிக்கும் சிறப்பு தருணமாகும். இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்” என பதிவிட்டுள்ளார். இது சிம்பு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!