Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் ஒரு அமைதி நிலவுகிறது… சர்ச்சைகளுக்கு சூசக பதில் அளித்த கெனிஷா!

Advertiesment
விவாகரத்து

vinoth

, திங்கள், 19 மே 2025 (13:25 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர்  ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதாக ரவி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆர்த்தி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவர்கள் பிரிவுக்குக் காரணமாக பிரபல பாடகி கென்னிஷா பிரான்சிஸ் பெயர் சொல்லப்பட்டது.  கென்னிஷா மற்றும் ரவி மோகன் ஆகிய இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதை இருவருமே மறுத்தனர். ரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயம் ரவி மற்றும் கென்னிஷா ஆகிய இருவரும் ஒரே நிறத்தில் ஆடையணிந்து ஒன்றாக வந்து கலந்துகொண்டது மீண்டும் சர்ச்சைகள் கிளம்பக் காரணமாக அமைந்தது.

இதையடுத்து ஆர்த்தி, ரவி மோகன் மற்றும் ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் ஆகியொர் அடுத்தடுத்து தங்கள் பக்க நியாயத்தை வெளிப்படுத்தி அறிக்கைகளை வெளியிட்டனர். இதனால் கென்னிஷா சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தன்னுடைய பதிலாக சமூகவலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் நம்பிக்கையில் ஒரு அமைதி நிலவுகிறது. என் ஆன்மாவுக்குள் தனிமையில் ஒரு அமைதியான போராட்டம் நடக்கிறது. என் மீதெறியப்படும் கம்புகளும், கற்களும் எனக்கான ஆயுதங்களாகவே மாறுகின்றன. நான் இசையைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேன்.  காயங்களை ஞானமாக மாற்ற விரும்புகிறேன். துயரங்களின் ஆழத்தில் இருந்து என் ஆன்மா பாடுகிறது. நாளைய விடியலுக்காவும், புதிய தொடக்கத்துக்காகவும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!