ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி ஆகிய இருவருக்கும் பொதுவெளியில் அறிக்கை வெளியிடக்கூடாது என்ன சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டித்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் சட்டபூர்வமாக பிரிவதற்கு விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி மற்றும் அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோர் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி ஆகிய இருவரும் அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் பொதுவெளியில் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் இடையே ஏதேனும் பிரச்சனை இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து தங்களுடைய வாதங்களை முன்வைக்கலாம் என்றும் பொதுவெளியில் அறிக்கை வெளியிடுவதற்கு ஏன் நீதிமன்றத்திற்கு வந்தீர்கள் என்றும் நீதிபதி கண்டித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது