சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவிருந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், அப்படம் இன்னும் அடுத்த கட்டத்திற்கு நகராமல் உள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருந்ததால், பல தயாரிப்பு நிறுவனங்கள் பின்வாங்கியுள்ளன. இந்த சூழலில், சிம்புவும் தேசிங்கு பெரியசாமியும் இணைந்து வேறொரு திட்டத்தை நோக்கி செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில், சிம்புவே AGS நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தார். ஆனால், சிம்பு நடித்த தக்லைப் பெரும் தோல்வி பெறறதால், AGS நிறுவனமும் தயாரிப்பில் இருந்து பின்வாங்கிவிட்டது. இதனால், பெரும் பட்ஜெட்டில் படத்தை உருவாக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், சிம்புவும் தேசிங்கு பெரியசாமியும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது சிம்பு, "நான் இரண்டு பெரிய வெற்றி படங்களைக் கொடுத்துவிட்டு வருகிறேன். அதற்குள் நீங்கள் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்துவிட்டு வாருங்கள். அப்போதுதான் நம் படத்திற்கு தயாரிப்பாளர்கள் எளிதில் கிடைப்பார்கள்" என்று தேசிங்கு பெரியசாமிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட தேசிங்கு பெரியசாமி, விரைவில் வேறு ஒரு புதிய படத்தை இயக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.