Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியன் 2 ட்ரோல்களா உஷாரான சித்தார்த்.. 3BHK படத்தின் ப்ரமோஷனில் அடக்கி வாசிப்பு!

Advertiesment
ஷங்கர்

vinoth

, வியாழன், 19 ஜூன் 2025 (09:07 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் வசூல் சுணக்கம் கண்டது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான ட்ரோல்களைப் பெற்றது.

இந்தியன் 2 படம் சம்மந்தமாக எழுந்த ட்ரோல்களில் அதிகமாக சிக்கியது இயக்குனர் ஷங்கரும், நடிகர் சித்தார்த்தும்தான். சித்தார்த் நடித்திருந்த சித்ரா அரவிந்தன் கதாபாத்திரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த படத்தின் ப்ரமோஷனின் போது சித்தார்த் அதிக உற்சாகத்தோடு படத்தை ‘ஆஹோ ஓஹோ’ வென பில்டப் செய்து பேசினார். இதனால் ரசிகர்கள் அவரை அதிகம் குறிவைத்துத் தாக்கினர்.

இந்த ட்ரோல்களால் தற்போது சித்தார்த் தன்னுடைய அடுத்த படமான ‘3BHK’ –க்கான ப்ரமோஷனில் அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளார். படம் சம்மந்தமான ஒரு நேர்காணலில் “இப்போதெல்லாம் ரசிகர்கள் படங்களைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஏனென்றால் படத்துக்குக் கொடுக்கப்படும் பில்ட் அப்கள்தான். உங்களுக்கு ஒரு படத்தின் போஸ்டர், டீசர், டிரைலர் பிடிக்கிறதா? படத்தில் உள்ள நடிகர்கள் மற்றும் இயக்குனர் மேல் நம்பிக்கை உள்ளதா? வந்து படத்தைப் பாருங்கள். யார் சொல்வதையும் கேட்டு அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன்னுடைய அடுத்த நாவலை வெளியிட்ட நடிகர் ஸ்ரீ… ரசிகர்கள் வாழ்த்து!