Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தக் லைஃப் படத்தை மிகவும் எதிர்பார்த்த சிம்பு… சம்பள விஷயத்தில் பின்னடைவா?

Advertiesment
தக் லைஃப் திரை விமர்சனம்

vinoth

, புதன், 18 ஜூன் 2025 (10:15 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.

நாயகன் படத்துக்குப் பிறகு 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி இணைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு நிலவியது.  ஆனால் படம் ரிலீஸான பின்னர் ரசிகர்களை இந்த படம் ஈர்க்கவில்லை. அதுமட்டுமில்லாமல் மிக மோசமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக வசூல் பெரிய அளவில் சரிந்துள்ளது. இதுவரை இந்திய அளவில் இந்த படம் 50 கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தைப் பெரிதும் எதிர்பார்த்த சிம்பு, தனது அடுத்த படத்துக்காக சம்பளம் எதுவும் பேசாமல் இருந்தாராம். இந்த படம் பெரிய வெற்றி பெற்றால் அதற்கேற்றார் போல சம்பளம் பேசலாம் என நினைத்திருந்தாராம். ஆனால் இப்போது படத்தின் தோல்வியால் அதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரி ரிலீஸ் ஆகும் அருண் விஜய்-மகிழ் திருமேனியின் சூப்பர் ஹிட் படம்!