Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்க உத்தரவிட முடியாது.. கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Advertiesment
Thug Life ban in Karnataka

vinoth

, செவ்வாய், 17 ஜூன் 2025 (13:46 IST)
கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் படம் தக் லைஃப். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், கன்னட மொழிக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், கர்நாடகாவில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்புகள் கிளம்பியது.

இதனால் அங்கு படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. மேலும் தக் லைஃப் படத்தை வெளியிடும் தியேட்டர்களை கொளுத்துவோம் என சில கன்னட அமைப்புகள் மிரட்டியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்த நிலையில் அங்கும் தான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை எனக் கமல்ஹாசன் அறிவித்தார். இந்த விஷயத்தில் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்டால் முடிந்துவிடும். ஆனால் அவர் ஈகோ பார்க்கிறார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குக் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் “கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்க  வேண்டும் என்று கூறுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை என அதிரடியாகத் தெரிவித்துள்ளது. கமல்ஹாசனை அவரது பேச்சுக்காக மிரட்டுவது சரியில்லை. ஒருவர் பேசுவது சரியில்லை என்றால் அதுகுறித்து விசாரணை நடத்தலாம்” எனத் தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.. முக்கிய கேரக்டரில் நெல்சன்..!