Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக பிரபங்களுடன் இணைந்த ஷில்பா ஷெட்டி! – டிக்டாக் டாப் 50 பிரபலங்களின் பட்டியல்!

Advertiesment
உலக பிரபங்களுடன் இணைந்த ஷில்பா ஷெட்டி! – டிக்டாக் டாப் 50 பிரபலங்களின் பட்டியல்!
, சனி, 16 மே 2020 (12:50 IST)
டிக்டாக் பிரபலங்களில் அதிக பாலோவர்களை கொண்ட பிரபலங்கள் பட்டியலில் டாப் 50 இடத்தில் இடம்பெற்றுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தொடர்ந்து இளைஞர்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் செயலி டிக்டாக். ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானாலும் டிக்டாக் செயலியை பயன்படுத்துவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். மேலும் உலக பிரபலங்கள் பலரும் டிக்டாக்கில் வீடியோ வெளியிடுவதால் டிக்டாக் மோகம் நாளுக்கு நாள் இளைஞர்களை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் டிக்டாக்கில் மக்கள் அதிகமாக பின்தொடரும் டாப் 50 பிரபலங்களின் பட்டியலை டிக்டாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஹாலிவுட் நடிகர்களான ட்வெய்ன் ஜான்சன், செலீனா கோம்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும் உள்ளார். அவரை டிக்டாக்கில் சுமார் 17 கோடிக்கும் அதிகமானோர் பின் தொஅர்ந்து வருகின்றனர். சமீபத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு இவர் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது.

இதுகுறித்து தெவித்துள்ள ஷில்பா ஷெட்டி ”இந்த ஊரடங்கு நாட்களில் வீடுகளில் உள்ள மக்களுக்கு எனது வீடியோக்கள் ஒருவகையில் பொழுதுபோக்காக இருந்ததில் மகிழ்ச்சி. நான் பகிர்ந்த சில வீடியோக்களில் எனது கணவரும் நடித்திருக்கிறார். தற்போது என்னிடம் உள்ள ஒரே நடிகர் அவர் மட்டும்தான்!” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லாக்டவுனில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் நடிகை ரோஜா - வீடியோ!