Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லாக்டவுனில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் நடிகை ரோஜா - வீடியோ!

லாக்டவுனில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் நடிகை ரோஜா - வீடியோ!
, சனி, 16 மே 2020 (11:34 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு  நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, ஒர்க் அவுட் செய்வது விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.அந்தவகையில் நடிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ரோஜா களத்தில் இறங்கி தனது தொகுதியில் கொரோனா தடுப்பு  நடவடிக்கை பணியான கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்திய புகைப்படங்கள் சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்தபடியே fitness challenge ஏற்று உடற்பயிற்சிகள் செய்யும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் , தான் இன்னும் ஒரு பிட்னஸ் நடிகை என்பதை ரோஜா எல்லாருக்கும் வெளிப்படுத்துகிறாராம் என கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனிருத் இசையில் ஹீரோவாக களமிறங்கும் பிக்பாஸ் தர்ஷன் - வேற லெவல் அப்டேட் இதோ!