Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாஸ்க் கூட அணியாமல் ஊரடங்கை மீறி ஊர் சுற்றும் சமந்தா - சர்ச்சைக்குள்ளான புகைப்படம்!

Advertiesment
மாஸ்க் கூட அணியாமல் ஊரடங்கை மீறி ஊர் சுற்றும் சமந்தா - சர்ச்சைக்குள்ளான புகைப்படம்!
, சனி, 16 மே 2020 (10:46 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

8 வருட காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் அனைத்து திரைப்பிரபலங்களும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுவருகின்றனர்.

ஆனால், நடிகை சமந்தா ஊரடங்கை மீறி தனது கணவருடன் பைக்கில் கிளம்பும் புகைப்படமொன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் மாஸ்க் கூட அணியாமல் போஸ் கொடுத்துள்ளதால் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலகமே போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இப்படி நடந்துகொள்ளும் பிரபலங்களால் சாதாரண மக்கள் கடுப்பாகியுள்ளனர். சமந்தா - நாகசைதன்யா ரசிகர்கள் மட்டும் இந்தநேரத்தில் வீட்டில் கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பது உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது என அறிவுரை கூறி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ராஜமவுலி படத்தில் இணைந்தார் தமன்னா...!