இதுல ஐஸ்வர்யா ராய் யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம் - வைரலாகும் சிறுவயது புகைப்படம்!

சனி, 16 மே 2020 (10:38 IST)
1994 இல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம்  நாயகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடித்து உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

அதையடுத்து 2007ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்து ஆரத்யா என்ற மகளை பெற்றெடுத்தார். மகள் பிறந்த பிறந்த பிறகு சில காலம்  சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த ஐஸ்வர்யா ராய் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி பாலிவுட்டின் டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்கள் முழுக்க தீயாய் பரவி வருகிறது. தோழிகளுடன் எடுத்துக்கொண்ட இந்த குரூப் புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் யார் என்பதை கண்டுபிடித்து ஆளாளுக்கு ஷேர் செய்து வருகின்றனர். 
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 

Can you guess where's our Aishwarya in these pics

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நாங்க என்ன தாழ்த்தபட்டவர்களா? 3 நாட்களுக்கு பின் திடீரென பொங்கிய பா.ரஞ்சித்