ஹாலிவுட் நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பணக்கார நடிகர் ஆனார் ஷாருக் கான்..!

vinoth
வியாழன், 2 அக்டோபர் 2025 (07:39 IST)
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார் ஷாருக் கான். சமீபத்தில் அவரது படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஹாட்ரிக் ஹிட் கொடுத்து கம்பேக் கொடுத்தார். ஜவான் படத்துக்காக அவர் சமீபத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

தற்போது ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வரும் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் முன்னணி நிறுவனம் நடத்தி வெளியிட்ட ஆய்வின் படி உலகின் பணக்கார நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அந்த ஆய்வின் படி அவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 12,490 கோடி ரூபாயாகும்.

ஷாருக் கான் நடிகராக மட்டும் இல்லாமல் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் விஎஃப்எக்ஸ் பணிகளில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக உள்ளது. அதே போல ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் அவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments