நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்போது ஆர்யன் கான் தற்போது ஒரு வெப் சீரிஸை இயக்கி வருகிரார்..
தி பே…ட்ஸ் ஆஃப் பாலிவுட் என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரை நெட்பிளிக்ஸ் மற்றும் ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. பாலிவுட் பின்னணியில் நடப்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ள நிலையில் தற்போது முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகியுள்ளது. இதன் டீசர் வரும் 20 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்த வெப் தொடரில் பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.