Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் அதிமுகவில் இணைகிறார் நடிகர் செந்தில்!

மீண்டும் அதிமுகவில் இணைகிறார் நடிகர் செந்தில்!
, சனி, 26 டிசம்பர் 2020 (17:07 IST)
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான செந்தில் அமமுக வில் இருந்து வெளியேறி நாளை அதிமுகவில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் கவுண்டமணியோடு இணைந்து பல படங்களில் நகைச்சுவை சாம்ராஜ்யம் செய்தவர் நடிகர் செந்தில். திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் அவர் அதிமுகவில் இணைந்து அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரங்களில் ஈடுபட்டார். அதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த போது அமமுகவில் இணைந்தார்.

இப்போது அந்த கட்சியில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர உள்ளதாக சொல்லப்படுகிறது. நாளை அவர் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பா ரஞ்சித்தின் படம் கேரளா திரைப்பட விழாவுக்கு தேர்வு!