Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா ரஞ்சித்தின் படம் கேரளா திரைப்பட விழாவுக்கு தேர்வு!

பா ரஞ்சித்தின் படம் கேரளா திரைப்பட விழாவுக்கு தேர்வு!
, சனி, 26 டிசம்பர் 2020 (17:01 IST)
பா ரஞ்சித் தயாரித்துள்ள குதிரை வால் திரைப்படம் கேரள திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பா ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தற்போது வரிசையாக படங்களைத் தயாரித்து வருகிறார். அதில் ஒன்றாக இப்போது குதிரைவால் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி பாட்டில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மனோஜ் லியோனல் ஜோன்ஸ் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த திரைப்படத்தை மேஜிக்கல் ரியலிசம் எனும் வகையில் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர்.

இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் இப்போது கேரள அரசால் நடத்தப்படும் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைப் படக்குழு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதனைப் பகிர்ந்த தயாரிப்பாளர் பா ரஞ்சித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் இந்தி ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ் !