Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்.. செல்வராகவனின் இன்றைய தத்துவ முத்து!

Advertiesment
புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்.. செல்வராகவனின் இன்றைய தத்துவ முத்து!

vinoth

, புதன், 5 மார்ச் 2025 (15:22 IST)
தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இயக்குனராக தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிகளைக் குவித்தவர் செல்வராகவன். அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும்  புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் பெறாவிட்டாலும் நல்ல விமர்சனங்களையும் குவித்தன.

ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைக் கண்டு வருகின்றன. இடையில் அவர் சாணிக் காயிதம் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி கவனம் பெற்றார்.  இதற்கிடையில் சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இயங்கி வரும் அவர் அறிவுரை செய்யும் விதமாக பல பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்.

அப்படி இன்று தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் “ஐயோ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் முன்பே தெரியவில்லையே! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒருபோதும் கலங்காதீர்கள். புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்! இந்த நொடிதான் பிறந்தது போல நினைத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்பையில் முகாமிட்ட லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ படக்குழு!