தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இயக்குனராக தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிகளைக் குவித்தவர் செல்வராகவன். அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் பெறாவிட்டாலும் நல்ல விமர்சனங்களையும் குவித்தன.
ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைக் கண்டு வருகின்றன. இடையில் அவர் சாணிக் காயிதம் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி கவனம் பெற்றார். இப்போது பல படங்களில் அவர் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சொர்க்கவாசல் திரைப்படத்தின் ரிலீஸை ஒட்டி அளித்த நேர்காணலில் அவரிடம் புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது வரும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “அவற்றை வெப் சீரிஸாக எடுக்கலாம். அப்போதுதான் அதிக நேரம் கிடைக்கும். நிறைய விஷயங்களை சொல்ல முடியும்” எனக் கூறியுள்ளார்.