தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இயக்குனராக தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிகளைக் குவித்தவர் செல்வராகவன். அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் பெறாவிட்டாலும் நல்ல விமர்சனங்களையும் குவித்தன.
ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைக் கண்டு வருகின்றன. இடையில் அவர் சாணிக் காயிதம் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி கவனம் பெற்றார். இந்நிலையில் இப்போது 7ஜி ரெயின்போ காலணி 2 படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு பாதியிலேயே நிற்கிறது. இதற்கிடையில் அவர் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இன்று மாலை இந்த படத்தின் போஸ்டர் வெளியிட உள்ள நிலையில் அதை நடிகர் தனுஷ் வெளியிடவுள்ளார்.