கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 திரைப்படத்தின் வேகத்துடன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வெளியான டீசர், அதன் பிறகு, இன்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்போது படக்குழுவினர் சுமார் 3 நிமிட நீளமான வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில், சீன உளவாளிகளுடன் கார்த்தி பரபரப்பாக மோதும் ஸ்டண்ட் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த சண்டை காட்சியின் இறுதியில், ஒரு சீனர் கார்த்தியிடம், "இந்த மோதல் முடிவல்ல. உன் தேசத்துக்கு பெரிய அழிவே வரப்போகிறது. உலகின் சகல உளவுத்துறை நிறுவனங்களும் உனக்கு எதிரே நிற்கின்றன... குறிப்பாக பிளாக் டேக்கர்!" என எச்சரிக்கிறார்.
பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த ஸ்டண்ட் காட்சிகள், படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்கம் - பி.எஸ். மித்ரன், ஒளிப்பதிவு - ஜார்ஜ் வில்லியம்ஸ், படத்தொகுப்பு - விஜய் வேலு. இதற்கு முன்னதாக, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இருப்பார் என கூறப்பட்ட நிலையில், தற்போது சாம் சிஎஸ் தான் அதிகாரப்பூர்வமாக இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.