மக்களின் இதயத்தைக் கவர்ந்த "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி தனது புதிய சீசனுடன் திரும்ப வருகிறது. சமையல் மற்றும் நகைச்சுவையின் இணைப்பால் பெரியவர்களும் சிறியவர்களும் விரும்பிப் பார்ப்பவர்களாக இருக்க, இந்நிகழ்ச்சிக்கு தனித்துவமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
சமையலில் தேர்ச்சி பெற்ற குக்குகளும், சமையல் பற்றிய அடிப்படை அறிவும் இல்லாத கோமாளிகளும் இணைந்து சமையல் செய்யும் பொழுது ஏற்படும் நகைச்சுவையான தருணங்களே இந்த நிகழ்ச்சியின் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இதுவரை 5 சீசன்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில், கடைசி சீசனில் நடுவர்களாக தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜன் இருந்தனர்.
5வது சீசனில் பிரியங்கா முதல் இடத்தை, சுஜிதா இரண்டாமிடத்தையும், முகம்மது இர்ஃபான் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். தற்போதைய தகவலின்படி, "குக் வித் கோமாளி" 6வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. புதிய சீசனுக்கான குக்குகள், கோமாளிகள் தேர்வு நடைமுறையில் உள்ளது. சமீபத்தில் முடிந்த "பிக் பாஸ் - 8" போட்டியாளர்களில் சிலர் இதில் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!