Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் சமந்தாவின் யசோதா… மூன்று நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

Advertiesment
பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் சமந்தாவின் யசோதா… மூன்று நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?
, திங்கள், 14 நவம்பர் 2022 (16:08 IST)
சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டி வருகிறது.

சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள யசோதா திரைப்படம் இரு நாட்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது. இந்த படம் வாடகைத்தாய் சம்மந்தப்பட்ட கதைக்களமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் ஆகியவை மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தன.

டிரைலரில் சமந்தாவின் அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளன என்பதும் கர்ப்பிணியாக இருக்கும் அவர் தனது குழந்தைக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முயற்சிகளின் காட்சிகள் அபாரமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் வசூலில் இந்த திரைப்படம் பாசிட்டிவ்வான வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் 6.20 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொலல்ப்படும் நிலையில் 3 நாட்களில் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லபடுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதியின் DSP படத்தில் இருந்து விலகியதா சன் பிக்சர்ஸ்? பின்னணி என்ன?