நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்யன் திரைப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ராட்சசன் படத்திற்குப் பிறகு, விஷ்ணு விஷால் இந்த படத்தில் மீண்டும் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கட்டா குஸ்தி படத்தின் வெற்றிக்கு பிறகு, விஷ்ணு விஷால் நடித்த லால் சலாம் திரைப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால் ஆர்யன் அவருக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் நாளை மறுநாள் ரிலீஸாகிறது. ஆர்யன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதமே நிறைவடைந்தது.
இந்தப் படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படம், ஒரு கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழில் ரிலீஸாகும் அதே நாளில் தெலுங்கிலும் ரிலீஸாக இருந்தது. ஆனால் இந்த வாரம் ரவி தேஜாவின் மாஸ் ஜாதரா படமும் பாகுபலி ரி ரிலீஸும் வர உள்ளதால் ஒரு வாரம் கழித்து நவம்பர் 7 ஆம் தேதி தெலுங்கில் ரிலீஸாகும் என அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.