தமிழ் சினிமாவில் இயக்குனராக பல படங்களை இயக்கியவர் எஸ் ஏ சந்திரசேகர். சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் அவருக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
தனது மகன் விஜய்யை கதாநாயகனாக அறிமுகமாக்கி, அதன் பின்னர் அவரை ப்ரமோட் செய்யும் வேலைகளில் ஈடுபட்டதால் முன்பு போல பிஸியான இயக்குனராக செயல்படவில்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் இயக்கத்துக்கு திரும்பியுள்ள அவர் சமீபத்தில் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கி வெளியிட்டார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் ராம் அப்துல்லா ஆண்டனி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அதில் “இப்போதுள்ள இயக்குனர்கள் வன்முறைப் படங்களைதான் ரசிகர்கள் விரும்புவார்கள் என நினைத்து படம் எடுக்கிறார்கள். எங்கள் காலகட்டத்தில் பொழுதுபோக்கு படங்கள் அதிகமாக வந்தன. அதற்குள்ளும் தேவையான விஷயத்தை புகுத்தி சொல்வோம். நாட்டில் நடக்கும் தவறுகளை படத்தில் தைரியமாக சொல்வோம்” எனக் கூறியுள்ளார்.