Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதி பட கதாநாயகியை அறிவித்த சன் பிக்சர்ஸ்!

விஜய் சேதுபதி பட கதாநாயகியை அறிவித்த சன் பிக்சர்ஸ்!
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:23 IST)
நடிகர் விஜய் சேதுபதி பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி வசம் தற்போது 20 படங்களுக்கு மேல் கைவசம் உள்ளது. அவற்றில் 10க்கும் மேற்பட்ட படங்கள் முடிந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளன. சில படங்கள் ஓடிடி ரிலீஸூக்கு முயற்சி செய்து வருகின்றன. இவை இல்லாமல் இப்போது மாஸ்டர் செஃப் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

அவர் கைவசம் உள்ள படங்களில் பொன்ராம் இயக்கும் பெயரிடாத படமும் ஒன்று. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து முடிந்திருந்தாலும் கதாநாயகியைப் பற்றிய அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் அனுகிர்த்தி வாஸ் என்ற புதுமுக நடிகைதான் கதாநாயகியாக நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் 66 பட கதாநாயகி யார்? மூன்று பேருக்கு இடையே போட்டி!