போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர். கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, உலகளவில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
கிளப் போட்டிகளில் கிட்டத்தட்ட அனைத்துக் கோப்பைகளையும் வென்றுவிட்டாலும், இன்னும் ரொனால்டோ கால்பந்து உலகக் கோப்பையை தனது அணிக்காக வெல்லவில்லை. தற்போது 38 வயதாகும் ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து போட்டிகளில் 900 கோல்கள் அடித்து புதிய சாதனையைப் படைத்தார். இன்னும் அவர் மகுடத்தில் சூடப்படாத ஒரே சிறகாக உலகக் கோப்பை மட்டுமே உள்ளது
.
ஆனால் அவரது சக போட்டியாளரான மெஸ்ஸி கடந்த ஆண்டு உலகக் கோப்பையை வென்றார். அதனால் ரசிகர்கள் ரொனால்டோவை விட மெஸ்ஸிதான் சிறந்தவர் என்றும் மெஸ்ஸிதான் GOAT என்றும் புகழ்ந்து வருகின்றனர். இது சம்மந்தமானக் கேள்விக்குப் பதிலளித்துள்ள ரொனால்டோ “மெஸ்ஸி என்னை விட சிறந்தவர் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. உலகக் கோப்பையை வெல்வது எனது கனவு கிடையாது. வரலாற்றில் ஒரு வீரரை வரையறுக்க உலகக் கோப்பை அவசியமா? ஒரு தொடரின் 6 அல்லது 7 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வென்றால் ஒருவரை சிறந்த வீரர் என்பது நியாயமில்லை” எனக் கூறியுள்ளார்.